Content Status

Type

Linked Node

H5Content
Content

நேரடி பணபலன் பரிமாற்றம் (DBT)

  • நேரடி பணபலன் பரிமாற்றம் (DBT) என்பது இந்திய அரசாங்கத்தின் (GoI) ஒரு முக்கிய முயற்சியாகும். இதன் மூலம் எந்த ஒரு அரசாங்க மானியமும் அல்லது பலனும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், இடைத்தரகர்கள் அல்லது பங்குதாரர்கள், பணம் செலுத்தும் செயல்முறையை மட்டும் நிர்வகிக்கிறார்கள்.
  • தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டமானது பயனாளிகளின் தகவல்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், பணப் பலன்களை மாற்றுவதற்கும் முழு மின்னணு அமைப்பைப் பயன்படுத்தும் இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களில் முதன்மையான ஒன்றாகும்.
  • இதனை செயல்படுத்த நி-க்ஷ்ய் (Ni-kshay) பொதுநிதி மேலாண்மை அமைப்பு என்ற இரண்டு(PFMS) அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.இது மத்திய அரசின் கட்டண முறையாகும்.
  • பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகைகளை நேரடியாகப் பெற நி-க்ஷய் செயல்படுகிறது.

இதன்மூலம் கீழ்க்கண்ட பண பலங்களை அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

  • ஊட்டச்சத்து நிதியுதவி திட்டம் (நி-க்ஷய் போஷன் யோஜனா(NPY))
  • பழங்குடியினர் ஆதரவுத் திட்டம்
  • சிகிச்சை ஆதரவாளரின் மதிப்பூதியம்
  • நி-க்ஷயில் அறிவிக்கப்பட்ட அனைத்து காசநோயாளிகளுக்கும் (DSTB,DRTB) ஊட்டச்சத்து நிதியுதவி திட்டம் (“நி-க்ஷய் போஷன் யோஜனா”) எனும் திட்டத்தின் கீழ் சிகிச்சை காலம் மூலம் ரூ. 500/- வழங்கப்படுகிறது.



 

Content Creator

Reviewer