Content Status
Type
Linked Node
Sputum Collection Process
Learning ObjectivesProvide an overview of the sputum collection process from dispensing the sputum cup to handover to the health facility.
H5Content
Content
சளி சேகரிப்பு செயல்முறை
சளி சேகரிப்பு செயல்முறைகள்
- ஆய்வுக்கூட நுட்பனர்களால் சளி சேகரிக்க வேண்டிய குவளையில் குறிப்பிட்ட நோயாளியின் வரிசை எண் எழுதப்படும்.
- சளி மாதிரியை எடுக்கக்கூடிய அறிகுறி உள்ள நோயாளி காலை எழுந்தவுடன் வாயை தண்ணீர் மூலம் நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
- பிறகு இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மூச்சை நன்கு உள் இழுத்து வெளியில் விட வேண்டும்.
- அதன்பின் இருமி வெளியில் வரும் சளியை குவளையில் சேகரிக்க வேண்டும்.
- இரண்டு சளி மாதிரிகளை சேகரிக்க வேண்டும். முதலில் சுகாதார மையங்களுக்கு மருத்துவரை பார்க்க செல்லும் போது அதே இடத்தில் சளி மாதிரியை மேற்கண்டவாறு எடுத்து தர வேண்டும். இரண்டாவது சளி மாதிரியை வீட்டில் காலை எழுந்துடன் எடுக்க வேண்டும்.
- பிறகு அம்மாதிரியை சுகாதார ஆய்வுக்கூட மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
Image
- காசநோயைக் கண்டறியும் மையத்திற்கு வரும் காசநோயாளிகள் அங்கேயே சளி பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். நோயாளிகளுக்கு சளி மாதிரிகளை எடுத்து தர குவளைகளில் ஆய்வக வரிசை எண் எழுதி
- வழங்கப்டும்.வரிசையில் எழுதிய குவளைகளை எப்படி திறப்பது மற்றும் மூடுவது என்று சுகாதார பணியாளர்களால் கூறப்பட வேண்டும்.
- காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் வாயை கொப்பளித்த பின் இருமி குவளைகளில் சளி மாதிரிகளை எடுக்கவும் இது அதிகாலையில் எடுக்கப்படும் மாதிரி இதற்கு பி மாதிரிஎன்று பெயரிடப்பட்டுள்ளது.
- மற்றும் நன்கு திறந்த காற்றோட்டமான பகுதியில் சளி மாதிரிகளை சேகரிப்பதை உறுதி செய்யவும்.
- அதிகாலையில் சேகரித்த மாதிரிகளையும் சளி பரிசோதனை செய்யும் இடத்தில் சேகரித்த மாதிரியையும் அருகில் உள்ள சுகாதார வசதி அல்லது சளி பரிசோதனை செய்யும் மையத்தில் கொண்டு வந்து தரவேண்டும் சளி பரிசோதனை செய்யும் வசதி இல்லாத இடங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகளை பரிசோதனை மையத்திற்கு சுகாதார பணியாளர்களால் அனுப்பி வைக்கப்படும்.
Resources:
LMS Page Link
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments